சொற்பிரேதங்கள்......

.

பெருங்கனவின் விஸ்தீரணத்தின் விளிம்பு மடித்து பொதிந்து வைத்து இருந்தேன் .... சில சொற்களை ........ வயல்வெளியில் .... புளியமரக்கொம்பில் ... காய்த்தவை சில... நதி தீரத்தில் ... உருகிய நிலவில் .... முலைக்காம்புகளில் .. முக ப்பருக்களில் பூத்தவை சில..... யதார்த்த பெருவெளியில் பெருங்கனவுகள் ... வெடித்து தெறிக்கும் கணங்களில் .... சொற்கள் உருகி ... வியர்வை சுரப்பியிலும் வெளியேறும் .... சொல்லொண்ணா கவிதைகளாய் ... ஆவியான ஊமை கவிதைகள் விட்டு செல்கின்றன .... உடலில் சில உப்புசம் பூத்த சொற்பிரேதங்களை......
ஒணாசம்ஸகள்...........

.

ஒரு கடற்கரை நகரத்தின் கோடியில் ... சில பூக்கள் ,, மஞ்சோடும்.. உன்னோடுமாயிருந்தது ... என் முதல் ஓணம் ...... உன் கருவிழியோரத்தில் ஒளிந்து நின்ற காதலை .. பிடித்து உன்னிடம் நான் தந்தபோது ... பூக்களின் மேல் சிந்திய வெட்கத்தோடு .... மெல்லமாய் மருதலிதிருந்தாய்.. பிந்தைய ஒணங்கள் .. அதீத பூக்களையும் ..மஞ்சையும் அதீத வெட்கத்தையும் ... அத்தபூ களத்தில் சுமந்து வந்திருந்தது .... என் கொடரிக்காம்பில் வெட்டுண்ட பூக்களோடு கூடிய உன் விசும்பல் தினத்தின் பின்னான ஒரு வெற்று ஓணம்.. சூனியம் போர்த்தியபடிக்கு எதிர்கொள்கிறது இன்றென்னை .... கோடரியும் பூக்களுமற்ற வெற்று தினத்தில் ... வெறித்திருக்கிறேன் ,, கைபேசியை ... யாருக்கோ நீ அனுப்பிய ஒரு வாழ்த்து ... தவறுதலாகவேனும் எனக்கு வந்து விடாதா என்று .... எதற்கும் பிரயோசனமில்லை தான் எனினும்.... பூக்களின் மிச்ச வாசத்தோடு சொல்லி போகிறேன் ... ''''எண்டே ஹ்ருதயம் நிறஞ்ஞ ஒணாசம்ஸகள்'''
  • Followers