உன்னை பிரஸ்தாபிக்க சொல்கிறாய் என்னை.... நீயே என் காதலென்றும் .. வாழ்வு .., முழுமை என்றும்.. இன்னபிற எல்லாமேன்றும்... என் கருப்புக்கனவுகளுக்கும் உன் மோகத்திற்கும் இடையில் .......... நசுக்கி பிதுங்குகிறது ... என் சுயம்... குதிரை மனதினையும் குருதி பாயும் குறிகளையும் சபித்தபடி ..... மௌனமாய் தலை கவிழ்ந்து பிரச்தாபிக்கிறேன்'' ஆம் '' என்றே... உப்புக்கரிக்கிறது உன் சந்தோஷ முத்தம்....
சாகும் என் காதல் ....
உன் கடைசி வார்த்தைகளில் கழுத்தறுப்பட்ட என் கனவுகள்... .பீய்ச்சும் குருதியில் முங்கி.. மெல்ல சாகும் என் காதல்.... காத்திருப்பை மட்டுமே பரிசளித்த காலத்தை வைதபடிக்கு ... வீசுகிறேன் வெறுங்கையை ...... உதிர்ந்து சிதறும் கடைசி ஒற்றை ரோஜா ... கணவனின் கை கோர்த்தபடிக்கு நீ சிந்திய ஏளன புன்னகையின் விடத்தில் இன்னும் இன்னும் நீலம் பாரிக்கும் பிரபஞ்சம்.... இதயம் கிள்ளி கைத்தடியில் சொருகியபடிக்கு நீளும் என் பயணம்....
முயற்சிக்கிறேன் ......
எப்போதும் முயற்சிக்கிறேன் கவிதையின் முதலெழுத்து கடைஎழுத்திற்க்குள் ..... சொல்லி விடுவது என் காதலை என்று... எப்போதும் கவிதைகள் தோற்று ... குவியும் குப்பை மலையாய் அர்த்தமற்ற காகிதங்கள் ... '' காதலை பிரதிபலிக்கும் கவிதையை பிரசவிப்பது ஒன்றும் அதனை எளிதல்ல ''' சொல்லி அழும் காகிதங்கள் .. எழுதுகோலின் எச்சில் கறையோடு... உலக எழுதுகோல்களின் கடைசி சொட்டு எச்சில் தீருமுன் ... எப்படியாவது பதிக்கத்தான்வேண்டும் என் காதலை ... தூக்கம் செத்த இரவுகளிலும் பிரஞை செத்த பகல்களிலும் ... சுமையாகவே இருக்கிறது சில காகிதங்களும் ... ஒரு காதலும் .... சொல்லி விடுவேன் என்றேனும் ஒரு நாள் ... அது வரை என்னை .. மரங்கள் மன்னிக்கட்டும் மனிதர்கள் மன்னிக்கட்டும் .....
கவிதையை காணோம்....
நேற்றிரவு கனவினில் ஜனித்த கவிதையை காணோம்..... படுக்கையின் கீழோ மூளை..,மன அடுக்குகளின் கீழோ.... புதைந்து விட்டிருந்தது.. ''டீ'' க்கு அழைத்த நண்பனை திட்டி .... பல் விளக்காமல் பேந்த விழித்தபடி ........ மூளை மன அடுக்குகளை புரட்டி போட்டிருந்தேன்.. ப்ரம்ம பிரயத்தனத்தில் சிதைந்து ..சிக்கியது .... கவிதை.... சீராக்கி .. நேராக்கி படிக்கையில் ... பெருமூச்சுடன் வெளிப்படும் '' பேசாமல் .. டீ அடிக்கவே..போயிருக்கலாம்....'''.
போக்கற்று போகும் மேகங்களாய்....
எப்போதும் கூட்டி திரிகிறேன் என் வக்கிர சாத்தானை வர்ணம் பூசி மறைத்தபடி ........... சமயங்களில்... பல்லிடிக்கில் வழியும் குருதியை புறங்கையால் துடைத்தபடி புன்னகைக்கும் பொது ..... சிறிது உறுத்தும் தான்.... பகுதி சதை அறுத்தல் சாத்தியமில்லை எனினும்... இவனை எங்கேனும் தொலைக்க தான் வேண்டும்.. .. ஒவொரு இரவிலும் ஒரே சபதம்.. ஆயினும் ..விடியலில் என் சபதம் தின்று சீரணித்தபடி..... ஏப்பம் விட்டு இளிப்பவனை என் செய்ய......? மீண்டும் தொடங்கும் பயணம்... வர்ணத்துடன் .... போக்கற்று போகும் மேகங்களாய்....
  • Followers