காதல் வளர்த்த ஆலயத்தில்....
நீ இன்றி தனியேநுழைகிறேன்........
நாம் காதல் வளர்த்த ...
நம் காதல் வளர்த்த ஆலயத்தில்....
ஒளியை உதிர்த்து
சூனியம் சூடி , விகாரமாய்
பல் இளித்து கிடக்கின்றன
உட்ப்ரகாரங்கள் .......
கும்மிருட்டில் கால்களுக்கிடையில்
சர சரத்து நுழைகிறது ..
பாம்போ .. பூரானோ ...
இல்லை..ஒரு முத்தநாளில் நீ
தொலைத்த ........உன்
ஒற்றை கால் கொலுசோ...?
நீ தட்டி விளையாடிய
இசைத்தூண்கள் ......மொழி திரிந்து .
மௌனம் பேசுகின்றன.
நீ வீசும் பொரிஇன்றி...
கூட்டம்கூட்டமாய் தம் முன்னோர்கள்
தற்கொலை செய்ததாய் ...
நாடோடி கதைபேசி திரிந்தன ......
தெப்பத்தில் இளைய மீன்கள்...
நீ சாய்ந்து கதை பேசிய
கல் தூண் .இன்னும்
வெளி தள்ளுகிறது.. உன்........
வெப்பத்தை....
வியர்த்து விதிர்த்தபடி
வெளியேறுகிறேன் .........
.
நீயின்றி பாழான ஆலயத்திலிருந்து.............
எல்லா காதலர்களுக்கும்
இருக்கவே இருக்கிறது.......
காதல் வளர்த்த ஆலயமோ
இல்லை பாழான ஆலயமோ...............
Labels: 1 comments | | edit post
Reactions: 
  • Followers