undefined
undefinedundefined

மஞ்சள் நிறத்தில்
புள்ளிகளுடன
நெளி நெளியாய்
கையில் அலையும்
தண்ணீர்ப் பாம்பின்
புள்ளிகளில் நிறைத்த
வெற்றிக் கூச்சலோடு...
ஓடிசெல்லும் அரை ட்ரவுசர்
சிறுவர்களை கண்டு ....
அருகிலுருந்தவன் ...
காட்டுமிராண்டி சிறுவர்கள் ..
பாவம் பாம்பென்றான் ....
மேலும் மடிகணினியை
நோண்டியபடிக்கு
தண்ணீர்ப் பாம்புகள்
சாதுவானவை என்றும்........
விஷமற்றவை ...
கோளுப்ரிட்ஸ் இனத்தவை...
குட்டியும் முட்டையும்
இடும் என்றும் ..
இன்னும்
என்ன என்னனவோ
சொல்லிகொண்டிருக்க .....
வாதங்கள் புறந்தள்ளி ..
பால்யத்தை எழுப்பி
கொண்டோடிய என் மனம்
ஐக்கியமாகி விட்டிருந்தது...
கழுத்தில் பாம்புடன்
ஈசனாய் அவதரித்திருந்த
ஓர் ஒல்லி சிறுவனின்
பக்கத்தில் பூதகணமாய்...
தலை தொங்கிய பாம்பு
முணுமுனுத்துகொண்டிருந்தது...
தண்ணீர்ப் பாம்புகள்.
தண்ணீரில் தான் வசிக்கும்...
|