undefined
undefinedundefined
நீ தந்த ஒவ்வொரு
துவேஷங்களுடனும் ... சேர்த்தே
துப்புகிறாய் புழுக்களையும் ..
தெருவெங்கும் நச நசத்து..
திரிகின்றன புழுக்கள்.....
அலறி , பதறி . ...
கால் மாற்றி .. கால் மாற்றி ..
தாண்டுகிறேன்..
எப்படியோ .. கால் வழி
ஊடுருவிய , ஒற்றை புழு ........
என் இதயம் தொட்ட கணத்தில் ..
நானும் துப்புகிறேன் ..
வண்டி வண்டியாய்...
புழுக்களை .......
புழுக்கள் ..புழுக்கள்...
கழுத்து வரை புழுக்கள் ..
நாகமாக மாறி ....
நம் மூளை தின்னும் ...புழுக்கள்
மூளை தின்னக்கொடுத்து
சமாதியாவோம் ..நாம் .
.புழுக்களின் கீழ்...........
undefined
undefinedundefined
வாகனத்தில் அடிபட்டு
தவளையாய் தலை நசுங்கி
கிடப்பவன் யார்...? உயிர் இருக்கிறதோ ...
இருந்திற்றோ...?
இருப்பின் பிழைப்பனோ ..
மாட்டானோ .. ? எனக்கொன்றும்
இல்லை சித்தம் அதில் ......
அவன் சட்டைப்பை வெளித்துப்பிய ....
அலைபேசியிலும் .. அம்பது
ரூபாய் நோட்டிலும் ....
நிலை குத்தி நிற்கிறேன் நான்............