'' அட.... த்தூ ... '''
சாதி.. மதம்.. இனம்.. மொழி .. காலனின் சட்டையில் பொருத்தமானவற்றை தெரிவு செய் ..எடுத்து அணி ... நாக்கு .. வாள்.. துவக்கு அவசியம் .. ஏதேனும் ஒன்றாவது .. வெறுப்பை உருமாற்றம் செய் .. குருதிஎனவும் ... உயிரெனவும் .... குடத்து நீரைக் கீழே கொட்டு ... குருதியிட்டு நிரப்பி வை... உன் வேற்றுமை ஜ்வாலையில் வேகும் சதை நரம்புகள் ... உப்பும் .. மிளகும் எடுத்து வை ... சுற்றிவரும் சமாதானத்தின் விசும்பல் ... கேட்காதே .. நமக்கது அவசியமில்லை ... காட்டுக்கூச்சலிடு .. ''யாமே பற்றாளன்'' என்று .. நாளை உனக்கு பட்டமளிப்பு விழா எடுப்பார் .. வீரன் என்றும் .. தியாகி என்றும்...' ' அட.... த்தூ ... '''
  • Followers