undefined
undefinedundefined
பால்யம் நீர்த்து
பால் உணர்ந்த வயதிலாயிருந்தது ...
உன் மீதான என் காதல்...
மஞ்சனத்தி ,அரளி பூக்களோடு
இருந்த நம் சிநேகிததில்
ரோஜாக்கள் முகிழ்த்த தருணங்கள்
அழகானவை ...
உன் முதல் தாவணி
வெட்க சிவப்பில்
நிறம் மாறிய பூக்கள்
இன்னும்
சிவப்பை பூசியே பூக்கின்றன ..
உன் சுவாசம் நிறைந்திருந்த
என் சுவாச பையில் ..
இன்னும்
செலவளிக்கமலே இருக்கிறது ..,
உன் ஒரு துளி சுவாசம்...
நாம் ரசித்த மஞ்சு விளைந்த மச்சுவும் ..
முகில் அடைந்த நிலாவும் ..
இன்றும் இருக்கின்றன...
அன்றைய அழகில்லாமல் ...
காத்திருத்தல் பணிக்கபட்டதால் ..
காத்திருக்கிறேன் ...
பின் எப்போதாவது திரும்பி வரும்
ரோஜாக்களும்...சுவாசமும்
மஞ்சுவும் நிலாவும் ..
பின் நீயும்....
undefined
undefinedundefined
மல்லாந்து படுத்திருக்கிறேன்
உத்தரத்தை நோக்கி .....
தொங்குகிறது உத்தரத்தில்
செத்து புழு வைத்த
என் மனச்சாட்சி .........
பறந்து வந்த பறவை
தன் அலகால் எனைக்
கொத்தி தூக்கி ..
இறுதி தீர்ப்பு நாளில் வீசி எறிந்தது.........
மனசாட்சி கொன்ற
பாவத்திற்கான வரிசையில் பெருங்கூட்டம்
.தலை கவிழ்ந்து ,கண்ணீரோடு
எம் பாட்டனும் முப்பாட்டன் மாரும்
இன்ன பிற
மான்புமிகுக்கலும் .. மான மிகுக்களும்..
தீர்ப்பு சொல்ல கடவுளை காணோம் ........
தேடி பார்க்க ..
வரிசையின் ஓரத்தில்
தலை முக்காடிட்டபடி கடவுள்.......
சரிதான் என்று பறவை கொன்று
தோளில்போட்டபடி
பூமியில் குதித்தேன் ...
மிச்சமிருக்கிறது இன்னும் வாழ்வு
undefined
undefinedundefined
தங்கையின் திருமணம் ...
கழுதை நெரிக்கும் கடன் ...
மனைவியின் சந்தோசம் ..
மக்களின் படிப்பு..
இன்றைகிப்படியாய்
என் சிறகுகள் கத்தரித்து
பத்திர படுத்தினேன் ...
உள் மன பெட்டகத்தில் ..
கனத்த மௌனம் விழுங்கி
அவ்வப்போது திறக்கையில்
சிறகுகள் படபடத்தபடி
சிறகுகலாகவே இருக்கின்றன...
இதுவே வாழ்கை
என போதிக்கபட்டதால்...
நான் என் தகப்பன் ஆனேன்...
நாளை ..
என் மகன் நானாவான் ...
.
என்றைகேப்போதும் ...
தொலைந்து கொண்டே இருக்கின்றன
அவரவர்களுக்கான ..
அவரவர் வாழ்வு......
undefined
undefinedundefined
விந்தணுக்கள் விலைக்கே
கிடைக்கும் ...
தகப்பனின் ஆயுட்கால சேமிப்பை கொடு ...
உன் கழுத்துக்கு தாலியும்
கருவிற்கு தகப்பனும் வாங்கலாம் ..
இல்லையேல் ஓரம் நில் ..
ஜன்னல் கம்பிகளை
கன்னங்களால் உரசி ...
கண்ணீரால் கழுவு ..
கணவனுடன் செல்லும் தோழியை
மனசுக்குள் கறுவு ..
யாருமில்லாத நேரத்தில்
தலையணையுடன் காதல் செய் ..
கனவினில் கூடு ...
அடுத்தவள் குழந்தைக்கு
பால் சுரக்கா முலைகளில்
பாலூட்டூ ...
ரசம் போன கண்ணாடியில்
முகச்சுருக்கம் எண்...
உன் அழகு தாவணிகள்
கந்தல் சீலையாய் மாறும்..
அலங்காரம் அசிரத்தையாய் மாறும்...
சூல் முட்டைகள் வலுவிழக்கும் ....
பின்னொரு நாளில்
வந்து சேரும் ஓலை....
''செத்துப்போ ...''
undefined
undefinedundefined
எண்ணக் குப்பைகளை கிளறி
தலை நுழைகிறேன் கோழியாய்
என் எண்ணங்களில்
அங்கங்கு பூவாசம் ..
அவ்வப்போது பிண வீச்சம் ....
வாய் நிறைந்த புன்னகை சிலநேரம்..
கடைவாய் ரத்தம் சில நேரம் .....
உடன் எழுந்து ..
இவன் இன்னவன் ..
இப்படியானவன் என்ற
உங்கள் அடையாளங்களை எனக்கு சுமத்தாதீர்கள் ...
நான் அடையாளமற்றவன்
உங்கள் அடையாளங்கள் என் உப்புக்குதவாதவை ..
இலக்கின்றி நடந்து தொலைவதான ...
என் வாழ்வியல் பாதையில்
உங்கள் அடையாளங்கள் துணை புரியா...
எனில் உங்கள் அடையாள சிலுவைகளை
நீங்களே சுமந்து கொள்ளுங்கள்
undefined
undefinedundefined
மகன் பள்ளிக்கு
போகையில் தோளில் சும..
மகன் காலாட்டி அமர
ஆயிரம் கால் பிடி
கல்லூரி சீட்டிற்கு..
பாட்டாவில் பூட் வாங்கி
மகனுக்கு அழகு பார் ..
அறுந்த உன் செருப்பை
அறுபதாவது முறை தைத்து மாட்டு...
உன் கந்தையை நீ கசக்கி கட்டு ..
மகனுக்கு இருக்கிறது
ரேய்மொண்டும் .. பீட்டேர் இங்கிலாந்தும் ..
ஊர் சுற்றி கடன் வாங்கு
மறக்காமல் மகனின்
கைசெலவுக்கு பணம் கொடு..
உன்னை நீயே தேய்த்து
ஓடாய் போ...
ஆயினும்......
வெளியில் சலம்பி திரிவான்
உன் மகன் ...
''' எங்கப்பன் சரியான பைதியகாரண்டா..?'''''
undefined
undefinedundefined
எவன் சூம்பி போட்ட
மாங்கொட்டை இது...
இன்று கிளை பரப்பி
விருட்சமாய் நிற்பது.......
அக்ரகாரத்து அய்யனோ..
பிள்ளையாகவோ இருக்குமோ....
இல்லை ..
தெற்குதெரு குப்பனோ .. சுப்பனோ ..
ஒருவேளை ...
வடக்கு தெரு தேவனகவோ ... இல்லை
வழிபோக்கு வாணிகனாகவும்
கூட இருக்கலாம்....
எவனாய் இருந்தால் என்ன..?
மாம்பழங்கள் சுவையானவை ....
undefined
undefinedundefined
காயாத யோனிகள்
எங்களுடையவை .....
பத்து நிமிடக் கணவர்கள்
பலர் வந்து போகுமிடம்....
பல அடுக்கு அலங்காரத்தின்
உள் ஒளிந்த
எம் முகங்கள் உன்
கவனத்திற்கு வராதவை ..
சதை தின்ன வந்தவனுக்கு
சாத்திரம் எதற்கு ..?
சடவு தீர வந்தவனுக்கு
மனப்புரிதல்கள் எதற்கு..?
வாருங்கள் ...
உங்கள் வக்கிரங்களையும்
அழுக்குகளையும் கொட்டி
நிரப்பி செல்லுங்கள்
எங்கள் காயாத யோனிகளை ..
ஆயினும் ..
சதை தின்று ..
சடவு தீர்த்து நெட்டி முறித்தபடி ..
எமை வேசி என்றழைக்கும் போதுதான்
கேட்க தோன்றுகிறது ..
'
'சரி.. உமெக்கென்ன பெயர்..? என்று
undefined
undefinedundefined
உன் பெண்ணியத்தில்
எனக்கு விருப்பமில்லை ...
என் ஆணாதிக்கத்தில்
உனக்கு ஒப்புதலுமில்லை ....
ஆயினும் ...
இருள் கவயும் மாலையிலும்
பனி சூழ்ந்த இரவுகளிலும்
கலைந்த நம் படுக்கையினூடே
சில நிமிடங்களேனும்
அம்மணமாய் மூர்ச்சையாகி கிடக்கின்றன
உன் பெண்ணியமும்
என் ஆணாதிக்கமும் ....
undefined
undefinedundefined
சாலையோர அழுகிய
பிண நாற்றமாய்
உன் நியாபகங்கள் ....
மூச்சடைத்து
முழி பிதுக்கும் ......
ஆயினும் ..
காக்கையாய் மாறி
பிணம் கொத்துவதாய் இருக்கும்
என் மனம் ..................
undefined
undefinedundefined
நீள் இரவின் அந்தகாரத்தில்
புரண்டு கொண்டிருந்தோம்
இருவரும் ..............
நிர்வாணமாக ....
முந்திய இரவில்
சுகித்ததின் தகிப்பு
இன்னும் மிச்சம் இருந்தது
நம் உடலில் .......
'' காமம் தவறா..? '' என்றாய் ..
திடுக்கிட்டு விழித்தேன் ..
அகங்கார உலகம் தன்
அகண்ட வாய் பிளந்து
உன்னை விழுங்கி கொண்டிருந்தது ....
தடுக்க எத்தனிக்க ..
''' நடத்தை கெட்டவள் '''' என்று
காரணித்தது....
ஆண் என்னும் கவுரவத்தில்
வெளியேறி ...
அலைந்து திரிகிறேன் நான் ....
இன்னுமொரு '''''' நடத்தை கெட்டவளுக்காய்''''''
undefined
undefinedundefined
உன் உணவில்
சிறிதளவு சிதற விட்டாய் ..
சிற்றுஉயிர்கள் தின்று
பிழைக்கும் என்றாய் ..
நானும் சிற்றுயிர் தான்
சிதறி செல் .....
சிறு புன்னகையும்
சிறிது காதலையும் .......
undefined
undefinedundefined
நேற்றிரவின் மழையில்
விழுந்த ஒற்றை மின்னலில்
முளை விட்டிருந்தது
ஒரு காளான் ...
பளீர் வெண்மையும் ..
குழந்தையின் இதழொத்த
மென்மையும்
பல்வேறு அடுக்குகளும் .......
ஆனந்தமாய் ரசித்து
கொண்டிருந்தேன்...'
''ஐ...!!!!'' என்று வந்தாய் ..
அறுத்தெடுத்து கறி சமைத்தாய் ....
நீ நீயாகவும் ...
நான் நானாகவும்
இருப்பதில் என்ன ஆச்சரியம் ...?
undefined
undefinedundefined
பேசினோம் ... பேசினோம்
பேசிகொண்டே இருந்தோம் ....
நிற்கும் போது..
நடக்கும் போது
படுக்கும் போது ...
பே ....சிகொண்டே இருந்தோம் ...
ஆயினும் பேச வேண்டிய ஒன்றை
கவனமுடன் தவிர்த்தோம் ....
பிறகு பேசிக்கொள்ளலாம் என்று ...
பிறகு எப்போதும்
வாய்க்காமலேயே போயிற்று ..
அந்த '''பிறகு '''......
உனக்கு கணவனும்
எனக்கு மனைவியும்
வாய்த்த பின்னும் ...
இன்றும் அசை போடுவோம்
தவிர்த்த தருணங்களையும்
தவித்த வார்த்தைகளையும் ....
undefined
undefinedundefined
கொல்லைபுற புளியமரமோ ..
ஊரெல்லை ஆறோ.. குளமோ...
உன் விருப்பம் ...
பஸ்ஸோ .. ரயிலோ ..
வயக்காட்டு பூச்சிமருந்தோ ..
அன்றி ...
இமய மலை சாரலோ ....ராமேஷ்வரமோ .....
உன் இஷ்டம் ....
ஆயின் போகும் முன் ....
விஞ்சி நிற்கும் ஒற்றை வினாவிற்கு
விடை அளித்து செல் ...'
'''' வாழ்வென்பது யாது...??????'''''
undefined
undefinedundefined
என் தோழிக்கு...
கவனம் ..
பார்த்து நட என் தோழியே...
நெருஞ்சிகள் உன் பாதையில்
நெருக்கமாய் நிரவபட்டுள்ளன ...
நெருஞ்சிகளின் கீழ் நாகங்களும் ...
சில நேரம் புதைகுழிகளும் கூட
தட்டுபடலாம் ...
முலை கடித்து ரத்தம்
உறிஞ்ச காத்திருக்கின்றன ஓநாய்கள் ...
கவனம் ..
ஆயினும்நடப்பதன்றி வேறென் செய்வாய் நீ ...?
''பிறவி பெருங்கடல்கடந்தாக வேண்டுமே,,?''
undefined
undefinedundefined
மண்டை ஓடுகள் விற்பனைக்கு ...
கரிசல் காடுகளில் இது
கந்தகங்களின் அறுவடை காலம் ...
சிதறி கிடக்கும் மண்டை ஓடுகளில் ..
சிறிதோ.. பெரிதோ...
நம் மகனின் காலுக்கேற்பவாங்கி செல்வோம் ...
நல்ல உதை பந்தாகலாம் ...
அன்பு மனைவியின்
பாவாடை நாடாவிற்கோ
உள் பாடி ஊக்கு தைப்பதற்கோ
இருக்கவே இருக்கிறது
நம் சகோதரனின்
நரம்புகள் விற்பனைக்கு ....
நம் வீட்டு கர்ப்பபையில்
குண்டுகள் வெடிக்காதவரை...
எவென் செத்தால் நமெக்கென்ன ..?
வா நண்பா ..,
நமெக்கென இருக்கவே இருக்கிறது ..'
''' சாராய கடையும் ஷகீலா படமும்.. ''''