நான் காதல்........
உன் கூரிய பார்வை கொண்டு கீறுகிறாய் என் இதயத்தை.. நகக்கண் இடுக்குகளிலும் பீறிட்டு வழிகிறது என் அன்பு.......... நாக்கை சுழற்றியப்படி தலை வெளி நீட்டிய என் காமம்...... அன்பை சிறிது குடித்தும் குளித்தும் தன்னை காதல் என்றே பிரகடனபடுதிகொண்டது .......... கனவுசிறகுகளை திருடி போர்த்தியபடி ... .வெளிக்கிட்டது என்காதல் உன்னை நோக்கி ......
அந்த ஒற்றைபனித்துளி.....
ஒற்றை பனித்துளியில் லயித்து... ;
நான் ஜனித்த போது..
உடைந்து ஜீவ நதியாய்
பிரவாகித்தது....அந்த
ஒற்றைபனித்துளி.....
வேர்களோடான அதன்
நீள் பயணத்தில் ...
பூக்களோடு
பிரக்ஞை யும் இல்லை ...
ஒரு பிணக்கமும் இல்லை..
நீர் குடித்து .,,,
உயிர்பிடித்தலும்...
தான் அழுகி அழிதலும்
அதனதன் இயல்பு ..
நதி ஓடும் ..சுழன்றும் ..
நுரைப்பூ பூத்தபடியும்..
சலசலத்தோடி ....நீலகடலில்
செத்துபோகும் நதி
சாக்கடையுடன் ....
பின்னொரு நாள்
உங்களுக்கு விளக்கப்படும்...
நதியே வாழ்வென்றும்...
கடலே பிரபஞ்சமேன்றும் ...
கூடவே..
ஜீவ நதியும் சாக்கடையும்
ஒன்றென்றும்....
இருளை போர்த்தியபடிக்கு
வழியும் பெருமழை இரவில் ...
கூகைகளின் கதறலோடு
தனித்திருக்கும் மழை ......
கைக்கொட்டி .., காகிதக்கப்ப்பல்
விட்டு . அதன் பின்னோடும்
பிள்ளைகள் இன்றி ...
சிறிதாய் நனைந்து ..
சிறிதாய் நனைத்து ...
தூறல் சிதறடிக்கும்
காதலரும் இன்றி ...
தனிதிருதலின் வலி
உணரும் பெருமழையும் ......
வெள்ளம் வடிந்தோடிய
கால்வாய் சுவடுகளில் ...
விடியலில் காணக்கிடைக்கும்
தனித்த மழையின்
கண்ணீர் சுவடுகள் .....
  • Followers