உன்னை பிரஸ்தாபிக்க சொல்கிறாய் என்னை.... நீயே என் காதலென்றும் .. வாழ்வு .., முழுமை என்றும்.. இன்னபிற எல்லாமேன்றும்... என் கருப்புக்கனவுகளுக்கும் உன் மோகத்திற்கும் இடையில் .......... நசுக்கி பிதுங்குகிறது ... என் சுயம்... குதிரை மனதினையும் குருதி பாயும் குறிகளையும் சபித்தபடி ..... மௌனமாய் தலை கவிழ்ந்து பிரச்தாபிக்கிறேன்'' ஆம் '' என்றே... உப்புக்கரிக்கிறது உன் சந்தோஷ முத்தம்....
0 comments | | edit post
Reactions: 
சாகும் என் காதல் ....
உன் கடைசி வார்த்தைகளில் கழுத்தறுப்பட்ட என் கனவுகள்... .பீய்ச்சும் குருதியில் முங்கி.. மெல்ல சாகும் என் காதல்.... காத்திருப்பை மட்டுமே பரிசளித்த காலத்தை வைதபடிக்கு ... வீசுகிறேன் வெறுங்கையை ...... உதிர்ந்து சிதறும் கடைசி ஒற்றை ரோஜா ... கணவனின் கை கோர்த்தபடிக்கு நீ சிந்திய ஏளன புன்னகையின் விடத்தில் இன்னும் இன்னும் நீலம் பாரிக்கும் பிரபஞ்சம்.... இதயம் கிள்ளி கைத்தடியில் சொருகியபடிக்கு நீளும் என் பயணம்....
1 comments | | edit post
Reactions: 
முயற்சிக்கிறேன் ......
எப்போதும் முயற்சிக்கிறேன் கவிதையின் முதலெழுத்து கடைஎழுத்திற்க்குள் ..... சொல்லி விடுவது என் காதலை என்று... எப்போதும் கவிதைகள் தோற்று ... குவியும் குப்பை மலையாய் அர்த்தமற்ற காகிதங்கள் ... '' காதலை பிரதிபலிக்கும் கவிதையை பிரசவிப்பது ஒன்றும் அதனை எளிதல்ல ''' சொல்லி அழும் காகிதங்கள் .. எழுதுகோலின் எச்சில் கறையோடு... உலக எழுதுகோல்களின் கடைசி சொட்டு எச்சில் தீருமுன் ... எப்படியாவது பதிக்கத்தான்வேண்டும் என் காதலை ... தூக்கம் செத்த இரவுகளிலும் பிரஞை செத்த பகல்களிலும் ... சுமையாகவே இருக்கிறது சில காகிதங்களும் ... ஒரு காதலும் .... சொல்லி விடுவேன் என்றேனும் ஒரு நாள் ... அது வரை என்னை .. மரங்கள் மன்னிக்கட்டும் மனிதர்கள் மன்னிக்கட்டும் .....
1 comments | | edit post
Reactions: 
  • Followers