சொற்பிரேதங்கள்......

.

பெருங்கனவின் விஸ்தீரணத்தின் விளிம்பு மடித்து பொதிந்து வைத்து இருந்தேன் .... சில சொற்களை ........ வயல்வெளியில் .... புளியமரக்கொம்பில் ... காய்த்தவை சில... நதி தீரத்தில் ... உருகிய நிலவில் .... முலைக்காம்புகளில் .. முக ப்பருக்களில் பூத்தவை சில..... யதார்த்த பெருவெளியில் பெருங்கனவுகள் ... வெடித்து தெறிக்கும் கணங்களில் .... சொற்கள் உருகி ... வியர்வை சுரப்பியிலும் வெளியேறும் .... சொல்லொண்ணா கவிதைகளாய் ... ஆவியான ஊமை கவிதைகள் விட்டு செல்கின்றன .... உடலில் சில உப்புசம் பூத்த சொற்பிரேதங்களை......
Labels: | edit post
Reactions: 
2 Responses
  1. சொற்கள் பிரேதங்களாகி போனதை மிக அருமையாய் சொல்லி படைக்கிறது கவிதையை ..  • Followers