undefined
undefinedundefined
பாச்சை உருண்டைகளுக்கிடையில்
பச்சையம் மாறாமல் கிடக்கின்றன...
உன் வியர்வை .., மஞ்சள்
வாசம் சுமந்த .....
உன் மடல்கள் .......
எனக்கு சிறகுகள் தந்து
வாழ்வாய் இருந்ததும்.......
என் சிறகுகள் வெட்ட
வாளாய் இருந்ததும்..........
உன்னை சுமந்த ........ உன்
மடல்கள் தான் ...
மீண்டும் ..மீண்டும் .. உன் மடல்
வாசிக்கும் தருணங்களில் ..,
பனி ஊசி சொருகும் .
இதய வலியை உனக்கெப்படி
உரைப்பது நான்...........
மௌனமாய் சுவாசம் நிரப்புகிறேன்..
உன் வியர்வை ..., மஞ்சள் வாசத்தை......
கனவுகளில் இன்றென்றும்
உலா வருகிறோம் ...
சிவப்பு தாவணியில் நீயும்...
அரும்பு மீசையுடன் நானும் ........
பச்சையம் மாறாமல்
நாளையும் கிடப்பில் இருக்கும்
உன் மடல்களும்..... என் கனவுகளும்..
Subscribe to:
Post Comments (Atom)
poem on letter fine.
முதல் பத்தி மிகவும் அருமை..அதை தாண்டி என்னால் செல்ல இயலவில்லை.