undefined
undefinedundefined
விழுது வழி ஒழுகும்
சூரியனை .. கையில் அள்ளி
பருகியபடி .. பிரபஞ்சத்தை
உனக்கு கை காட்டுகிறேன்........
நீயோ புன்னகைத்தபடி ....
ஒற்றை பூவை பரிசளிக்கிறாய்..
தர்கங்களையும் ........
கவிதைகளையும் அறிமுகபடுத்துகிறேன்.......
உனக்கு கர்வத்துடன்.........
நீயோ...... கண் மூடி இதழ்
குவித்து என் உச்சி முகர்கிறாய்........
உன் பூ விளக்கிய பிரபஞ்சத்தையும்
ஒற்றை முத்தம் உடைத்த
என் தர்க்கத்தையும் ........ பொறுக்கி
சேர்த்தபடி நான்........
உன் முந்தானை எடுத்து
எனை மூடுகிறாய் முழுவதும்.....
உன் இளஞ்சூடு கதகதப்பில்
இளகி....... உருகி .....
காணாமலே போயின
என் பிரபஞ்சமும் .. தர்க்கமும்........
Subscribe to:
Post Comments (Atom)
very good poem
Ganam kuraindathu thalaiyil...
mika celumaiyana kavithai....