undefined
undefinedundefined
நேற்றிரவு கனவினில்
ஜனித்த கவிதையை காணோம்.....
படுக்கையின் கீழோ
மூளை..,மன அடுக்குகளின் கீழோ....
புதைந்து விட்டிருந்தது..
''டீ'' க்கு அழைத்த
நண்பனை திட்டி ....
பல் விளக்காமல்
பேந்த விழித்தபடி ........
மூளை மன அடுக்குகளை
புரட்டி போட்டிருந்தேன்..
ப்ரம்ம பிரயத்தனத்தில்
சிதைந்து ..சிக்கியது ....
கவிதை.... சீராக்கி ..
நேராக்கி படிக்கையில் ...
பெருமூச்சுடன் வெளிப்படும்
'' பேசாமல் ..
டீ அடிக்கவே..போயிருக்கலாம்....'''.
undefined
undefinedundefined
எப்போதும் கூட்டி திரிகிறேன்
என் வக்கிர சாத்தானை
வர்ணம் பூசி மறைத்தபடி ...........
சமயங்களில்...
பல்லிடிக்கில் வழியும் குருதியை
புறங்கையால் துடைத்தபடி
புன்னகைக்கும் பொது .....
சிறிது உறுத்தும் தான்....
பகுதி சதை அறுத்தல்
சாத்தியமில்லை எனினும்...
இவனை எங்கேனும்
தொலைக்க தான் வேண்டும்.. ..
ஒவொரு இரவிலும் ஒரே சபதம்..
ஆயினும் ..விடியலில்
என் சபதம் தின்று சீரணித்தபடி.....
ஏப்பம் விட்டு இளிப்பவனை
என் செய்ய......?
மீண்டும்
தொடங்கும் பயணம்... வர்ணத்துடன் ....
போக்கற்று போகும் மேகங்களாய்....