undefined
undefinedundefined
எப்போதும் முயற்சிக்கிறேன்
கவிதையின் முதலெழுத்து
கடைஎழுத்திற்க்குள் .....
சொல்லி விடுவது என்
காதலை என்று...
எப்போதும் கவிதைகள்
தோற்று ... குவியும்
குப்பை மலையாய்
அர்த்தமற்ற காகிதங்கள் ...
'' காதலை பிரதிபலிக்கும்
கவிதையை பிரசவிப்பது
ஒன்றும் அதனை எளிதல்ல '''
சொல்லி அழும் காகிதங்கள் ..
எழுதுகோலின் எச்சில் கறையோடு...
உலக எழுதுகோல்களின்
கடைசி சொட்டு எச்சில் தீருமுன் ...
எப்படியாவது பதிக்கத்தான்வேண்டும்
என் காதலை ...
தூக்கம் செத்த இரவுகளிலும்
பிரஞை செத்த பகல்களிலும் ...
சுமையாகவே இருக்கிறது
சில காகிதங்களும் ...
ஒரு காதலும் ....
சொல்லி விடுவேன்
என்றேனும் ஒரு நாள் ...
அது வரை என்னை ..
மரங்கள் மன்னிக்கட்டும்
மனிதர்கள் மன்னிக்கட்டும் .....
Subscribe to:
Post Comments (Atom)
எழுதுகோலின் எச்சில் கறையோடு...//
Annatha Chance Illa!! Pindringo!!
Anbu thambi Arun!