இருளை போர்த்தியபடிக்கு
வழியும் பெருமழை இரவில் ...
கூகைகளின் கதறலோடு
தனித்திருக்கும் மழை ......
கைக்கொட்டி .., காகிதக்கப்ப்பல்
விட்டு . அதன் பின்னோடும்
பிள்ளைகள் இன்றி ...
சிறிதாய் நனைந்து ..
சிறிதாய் நனைத்து ...
தூறல் சிதறடிக்கும்
காதலரும் இன்றி ...
தனிதிருதலின் வலி
உணரும் பெருமழையும் ......
வெள்ளம் வடிந்தோடிய
கால்வாய் சுவடுகளில் ...
விடியலில் காணக்கிடைக்கும்
தனித்த மழையின்
கண்ணீர் சுவடுகள் .....
| edit post
Reactions: 
2 Responses
  1. ... Says:

    subber.............


  2. என் தனிமைக்கும் இந்த பெருமழை உணவாகி போகிறது......நன்றி..


  • Followers