அந்த ஒற்றைபனித்துளி.....
ஒற்றை பனித்துளியில் லயித்து... ;
நான் ஜனித்த போது..
உடைந்து ஜீவ நதியாய்
பிரவாகித்தது....அந்த
ஒற்றைபனித்துளி.....
வேர்களோடான அதன்
நீள் பயணத்தில் ...
பூக்களோடு
பிரக்ஞை யும் இல்லை ...
ஒரு பிணக்கமும் இல்லை..
நீர் குடித்து .,,,
உயிர்பிடித்தலும்...
தான் அழுகி அழிதலும்
அதனதன் இயல்பு ..
நதி ஓடும் ..சுழன்றும் ..
நுரைப்பூ பூத்தபடியும்..
சலசலத்தோடி ....நீலகடலில்
செத்துபோகும் நதி
சாக்கடையுடன் ....
பின்னொரு நாள்
உங்களுக்கு விளக்கப்படும்...
நதியே வாழ்வென்றும்...
கடலே பிரபஞ்சமேன்றும் ...
கூடவே..
ஜீவ நதியும் சாக்கடையும்
ஒன்றென்றும்....
2 Responses
  1. Unknown Says:

    ஜீவநதியும் சாக்கடையும் ஒன்றுதானா என்று உந்தன் இந்த ஒற்றைபனித்துளி யோசிக்க வைத்துவிட்டது..


  2. yosiyungal oruvaelai kidaikkaperalam sariyana vidaiyai..


  • Followers