undefined
undefinedundefined
.
பெருங்கனவின்
விஸ்தீரணத்தின் விளிம்பு
மடித்து பொதிந்து
வைத்து இருந்தேன் .... சில
சொற்களை ........
வயல்வெளியில் ....
புளியமரக்கொம்பில் ...
காய்த்தவை சில...
நதி தீரத்தில் ...
உருகிய நிலவில் ....
முலைக்காம்புகளில் ..
முக ப்பருக்களில்
பூத்தவை சில.....
யதார்த்த பெருவெளியில்
பெருங்கனவுகள் ...
வெடித்து தெறிக்கும்
கணங்களில் ....
சொற்கள் உருகி ...
வியர்வை சுரப்பியிலும்
வெளியேறும் ....
சொல்லொண்ணா கவிதைகளாய் ...
ஆவியான ஊமை கவிதைகள்
விட்டு செல்கின்றன ....
உடலில் சில
உப்புசம் பூத்த
சொற்பிரேதங்களை......
undefined
undefinedundefined
.
ஒரு கடற்கரை நகரத்தின்
கோடியில் ...
சில பூக்கள் ,, மஞ்சோடும்..
உன்னோடுமாயிருந்தது ...
என் முதல் ஓணம் ......
உன் கருவிழியோரத்தில்
ஒளிந்து நின்ற காதலை ..
பிடித்து உன்னிடம்
நான் தந்தபோது ...
பூக்களின் மேல் சிந்திய
வெட்கத்தோடு ....
மெல்லமாய் மருதலிதிருந்தாய்..
பிந்தைய ஒணங்கள் ..
அதீத பூக்களையும் ..மஞ்சையும்
அதீத வெட்கத்தையும் ...
அத்தபூ களத்தில் சுமந்து வந்திருந்தது ....
என் கொடரிக்காம்பில்
வெட்டுண்ட பூக்களோடு கூடிய
உன் விசும்பல் தினத்தின் பின்னான
ஒரு வெற்று ஓணம்..
சூனியம் போர்த்தியபடிக்கு
எதிர்கொள்கிறது
இன்றென்னை ....
கோடரியும் பூக்களுமற்ற
வெற்று தினத்தில் ...
வெறித்திருக்கிறேன் ,, கைபேசியை ...
யாருக்கோ நீ அனுப்பிய
ஒரு வாழ்த்து ...
தவறுதலாகவேனும் எனக்கு
வந்து விடாதா என்று ....
எதற்கும் பிரயோசனமில்லை தான்
எனினும்....
பூக்களின் மிச்ச வாசத்தோடு
சொல்லி போகிறேன் ...
''''எண்டே ஹ்ருதயம் நிறஞ்ஞ ஒணாசம்ஸகள்'''
undefined
undefinedundefined
சாதி.. மதம்.. இனம்.. மொழி ..
காலனின் சட்டையில்
பொருத்தமானவற்றை
தெரிவு செய் ..எடுத்து அணி ...
நாக்கு .. வாள்.. துவக்கு
அவசியம் ..
ஏதேனும் ஒன்றாவது ..
வெறுப்பை உருமாற்றம் செய் ..
குருதிஎனவும் ...
உயிரெனவும் ....
குடத்து நீரைக்
கீழே கொட்டு ...
குருதியிட்டு நிரப்பி வை...
உன் வேற்றுமை ஜ்வாலையில்
வேகும் சதை நரம்புகள் ...
உப்பும் .. மிளகும் எடுத்து வை ...
சுற்றிவரும் சமாதானத்தின்
விசும்பல் ... கேட்காதே ..
நமக்கது அவசியமில்லை ...
காட்டுக்கூச்சலிடு ..
''யாமே பற்றாளன்'' என்று ..
நாளை உனக்கு
பட்டமளிப்பு விழா எடுப்பார் ..
வீரன் என்றும் .. தியாகி என்றும்...'
' அட.... த்தூ ... '''
undefined
undefinedundefined
உன் கூரிய பார்வை கொண்டு
கீறுகிறாய் என் இதயத்தை..
நகக்கண் இடுக்குகளிலும்
பீறிட்டு வழிகிறது
என் அன்பு..........
நாக்கை சுழற்றியப்படி
தலை வெளி நீட்டிய
என் காமம்......
அன்பை சிறிது
குடித்தும் குளித்தும்
தன்னை காதல் என்றே
பிரகடனபடுதிகொண்டது ..........
கனவுசிறகுகளை
திருடி போர்த்தியபடி ...
.வெளிக்கிட்டது என்காதல்
உன்னை நோக்கி ......
undefined
undefinedundefined

ஒற்றை பனித்துளியில் லயித்து... ;
நான் ஜனித்த போது..
உடைந்து ஜீவ நதியாய்
பிரவாகித்தது....அந்த
ஒற்றைபனித்துளி.....
வேர்களோடான அதன்
நீள் பயணத்தில் ...
பூக்களோடு
பிரக்ஞை யும் இல்லை ...
ஒரு பிணக்கமும் இல்லை..
நீர் குடித்து .,,,
உயிர்பிடித்தலும்...
தான் அழுகி அழிதலும்
அதனதன் இயல்பு ..
நதி ஓடும் ..சுழன்றும் ..
நுரைப்பூ பூத்தபடியும்..
சலசலத்தோடி ....நீலகடலில்
செத்துபோகும் நதி
சாக்கடையுடன் ....
பின்னொரு நாள்
உங்களுக்கு விளக்கப்படும்...
நதியே வாழ்வென்றும்...
கடலே பிரபஞ்சமேன்றும் ...
கூடவே..
ஜீவ நதியும் சாக்கடையும்
ஒன்றென்றும்....
undefined
undefinedundefined

இருளை போர்த்தியபடிக்கு
வழியும் பெருமழை இரவில் ...
கூகைகளின் கதறலோடு
தனித்திருக்கும் மழை ......
கைக்கொட்டி .., காகிதக்கப்ப்பல்
விட்டு . அதன் பின்னோடும்
பிள்ளைகள் இன்றி ...
சிறிதாய் நனைந்து ..
சிறிதாய் நனைத்து ...
தூறல் சிதறடிக்கும்
காதலரும் இன்றி ...
தனிதிருதலின் வலி
உணரும் பெருமழையும் ......
வெள்ளம் வடிந்தோடிய
கால்வாய் சுவடுகளில் ...
விடியலில் காணக்கிடைக்கும்
தனித்த மழையின்
கண்ணீர் சுவடுகள் .....
undefined
undefinedundefined
நீ இன்றி தனியேநுழைகிறேன்........
நாம் காதல் வளர்த்த ...
நம் காதல் வளர்த்த ஆலயத்தில்....
ஒளியை உதிர்த்து
சூனியம் சூடி , விகாரமாய்
பல் இளித்து கிடக்கின்றன
உட்ப்ரகாரங்கள் .......
கும்மிருட்டில் கால்களுக்கிடையில்
சர சரத்து நுழைகிறது ..
பாம்போ .. பூரானோ ...
இல்லை..ஒரு முத்தநாளில் நீ
தொலைத்த ........உன்
ஒற்றை கால் கொலுசோ...?
நீ தட்டி விளையாடிய
இசைத்தூண்கள் ......மொழி திரிந்து .
மௌனம் பேசுகின்றன.
நீ வீசும் பொரிஇன்றி...
கூட்டம்கூட்டமாய் தம் முன்னோர்கள்
தற்கொலை செய்ததாய் ...
நாடோடி கதைபேசி திரிந்தன ......
தெப்பத்தில் இளைய மீன்கள்...
நீ சாய்ந்து கதை பேசிய
கல் தூண் .இன்னும்
வெளி தள்ளுகிறது.. உன்........
வெப்பத்தை....
வியர்த்து விதிர்த்தபடி
வெளியேறுகிறேன் .........
.
நீயின்றி பாழான ஆலயத்திலிருந்து.............
எல்லா காதலர்களுக்கும்
இருக்கவே இருக்கிறது.......
காதல் வளர்த்த ஆலயமோ
இல்லை பாழான ஆலயமோ...............
undefined
undefinedundefined

எப்போது என்றே தெரியவில்லை ...
எப்போதும் என் கால்சட்டையில்
இருக்கும் .. பம்பரமும் .. கொலிகளும்
தொலைந்தது என்று ....
ஏனென்று புரியவில்லை .. இப்போதெல்லாம்
கிளிகளும் .. மைனாக்களும்
தட்டானும் .. பட்டம்பூசிகளும் ...
இன்னும் ...
சாரைக்குட்டிகளும் .., ஓந்தாந்கலும்
எனை பார்த்து பயபடுவதில்லை என்று ...
பெண்கள் அழகானதும் ...
உடைகள் சீரானதும் ...
ஐந்தறிவு ஜீவன்கள்பாவம் என்றானதும்
எப்போதென்றே தெரியவில்லை ....
யானைகளும் .. தேவதைகளும்
இப்போதொன்றும் கனவுகளில்
வருவதும், இல்லை ...
கண்ணாடியில் முகம் பார்த்து ..
மரு கிள்ளி... அரும்பு மீசை ஒதுக்கிய
ஒரு நாளில் மச்சி வீட்டு ஆச்சி
சிரித்தபடி கேட்டாள்...'
'
'என்ன பேரப்புள்ள ...
பெரியாளா ஆயிட்டிய.. போல இருக்கு ...?'''
புரிந்தும் புரியாமலும்
வெட்க்கதுடன் புன்னைகத்தபடி
படியிறங்கி போனேன் ....
பால்யத்தில் இருந்து .........
undefined
undefinedundefined

இடுக்காட்டின் கபால வீச்சத்துடன்
காற்றின் நிசப்தம் கிழிய ...
எனக்கு ஒப்பிக்கபட்டது
நேற்றைய மனிதர்களின்
எப்போதைக்குமான வாழ்வு ....
தலையின்றி வந்தவன் சொன்னான்
''' உம் வர்க்க ரீதியில் வழியிழந்தவன் ...
கூடவே ..தலையையும் ..'''
குருதி வழியும் யோனியுடன் ஒருவள்
'' பூக்கும் முன்னே புசிக்கப்பட்டவள்...
காயவில்லை இன்னும்
குருதி .. வலிக்கிறது''' என்றாள்
பல்லின்றி இளித்து ..சொல்லின
சில பல கிழங்கள் ...'
'எங்கள் சாவு நன்றென்றே ''''''
ஆண்களும் .., அடுப்பும்
பெரும் பயம் '' என்றாள்
பதட்டத்துடன் வந்த பெண்ணொருத்தி ...
'' எவளின் பாரமோ ..?
என் சதை தின்று
பாரம் குறைத்தன .. தெருநாய்கள்...''
விசும்பியபடி விளம்பியது பிஞ்சொன்று ....
மௌனமாய் தலை கவிழ்ந்தபடிகு
பூமியை வெறித்தவன் சொன்னான் ..
'' விலகி செல் .. இன்னும்
மிச்சம் இருக்கிறது எழுத வேண்டிய கவிதைகள் ...
''''' மனையும் .. மக்களும் ..
சுகமும் .. பணமும் ..
மிஞ்சும் கூகுரல்களுக்கிடையில்
யாரவன் எழுந்தோடியது ...?
கண்ணீர் விட்டு கதறியபடி ..
சுடுக்காட்டு சாம்பலை துடைத்தபடி ..?
சுடுக்கட்டு சிவனாய் இருக்குமோ ...?
எனில் .. ஒழிந்து போகட்டும் ..
விடியலில் வாழ்தியபடிக்கு
வெளியேறினேன் ....
''' நன்றே .. மரித்து போனீர்கள் ....
இனி குறையொன்றுமில்லை ...
எல்லாம் சுகமே ....''''