undefined
undefinedundefined
மண்டை ஓடுகள் விற்பனைக்கு ...
கரிசல் காடுகளில் இது
கந்தகங்களின் அறுவடை காலம் ...
சிதறி கிடக்கும் மண்டை ஓடுகளில் ..
சிறிதோ.. பெரிதோ...
நம் மகனின் காலுக்கேற்பவாங்கி செல்வோம் ...
நல்ல உதை பந்தாகலாம் ...
அன்பு மனைவியின்
பாவாடை நாடாவிற்கோ
உள் பாடி ஊக்கு தைப்பதற்கோ
இருக்கவே இருக்கிறது
நம் சகோதரனின்
நரம்புகள் விற்பனைக்கு ....
நம் வீட்டு கர்ப்பபையில்
குண்டுகள் வெடிக்காதவரை...
எவென் செத்தால் நமெக்கென்ன ..?
வா நண்பா ..,
நமெக்கென இருக்கவே இருக்கிறது ..'
''' சாராய கடையும் ஷகீலா படமும்.. ''''
Subscribe to:
Post Comments (Atom)
Anna how Unique u are??
எந்த பழைய கவிதையினையும் கண் முன் கொணராமல்!
உங்கள் நடை பல நேரம் என் மயிர்கால்களை 90o க்கு கொண்டுசெல்வதுண்டு!
வெறும் எழுத்துக்களை கொண்டு செருப்பும் பூமாலயும் தனி தரமாய் நெய்யும் என் ஆதர்சன தச்சனும் ஆசானுமாயும் போனீர் போ! [:O]
உங்களை புகழ உரிமையோ தகுதியோ இல்லாமல் இல்லை ஆனாலும் தம்பியாய் பெருமை கொள்ளும் இடத்தில என்னை வைத்துக்கொள்ளவே
என்றும் விரும்பும் அன்பு தம்பி நான் அருண் என நினைக்கிறேன்!!